இத நானே எதிர் பார்கல.

முன் குறிப்பு: நாலாப்புல மட்டும் தான் தமிழ் படிச்சேன். சோ எக்கச்சக்க தப்பு வரும். அதும் போக சாதாரண local தமிழ்-ல எழுதிருக்கேன். மன்னிக்கவும்.

நா ஒரு இருவது வருஷமா வெட்டியா வாழுறேன். (ஒன்னும் சாதிச்சி கிழிக்கல, ஆனால் சாதிக்கணும்னு ரொம்ப ஆசை.) 😛

நா ரொம்ப “closed type.” அதாவது சரியான ஆங்கிலத்துல introvert. இருந்தாலும், சில வருஷமா காலேஜ் வாழ்கை மூலமா, மற்றும் எனது சில அறிய நண்பர்கள் மூலமா, அன்பு, பாசம், நட்பு, மொக்கை-னு பல விஷயங்கள கற்று கொண்டேன்.

இருந்தாலும் எனக்கும் ஒரு “நட்புக் கதை” இருக்கு. இந்த வருஷம் ஆரம்பத்துல என் மிக சிறந்த நண்பன் சுதீர் என்ன வெச்சி ஒரு காமெடி போட்டோ எடுத்தான். அதுல நான் வேஷ்டி கட்டிட்டு guitar வாசிக்குராப்ல ஒரு pose. ரொம்பவே தற்செயலா அதுல ஒரு பொண்ணு கண்ணா பின்னான்னு tag பண்ணிடுச்சு. அதுல ஆரம்பிச்சது, இன்னும் நிறைய commenting, tagging, wall post-னு பரவிடுச்சு. அப்படி ஆரம்பிச்சது எங்க நட்பு.

சரி: பய்யன், பொண்ணு, நட்பு – அனேகமா காதல்ல முடியும்-னு நினைச்சிடாதீங்க.

Facebook Chat -ல வெட்டி பேச்சு பேசிட்டு இருந்தப்பதான் தெரிஞ்சிது இந்த பொன்னும் அவங்க வீட்டு ஒத்த புள்ள-னு. கூட பிறந்தவங்க யாருமில்லையான்னு அவங்க என்ன கேட்க, நானும் இல்ல, but இருந்தா நல்லா இருந்துருக்கும்ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க உடனே I too wish I had a brother -னு சொன்னாங்க. அதுக்கு நான் உடனே “ham sab hain na (நாங்கெல்லாம் இருக்கோம்ல)”-னு சொன்னேன். அங்க தான் எங்களுடைய நட்பு track மாறிச்சு.

வெறும் Facebook friends -a இருந்தவங்க, சகோதர-சகோதரியா மாறிட்டோம்.

நாங்க இதுவரைக்கும் நேர்ல சந்திச்சதில்ல. எனக்கு ஊர் முழுக்க நெறைய அக்கா-தங்கச்சி இருக்காங்க ஆனா தங்கச்சி-ன்னு ஒரு வார்த்தை என் காதுல விழுந்துச்சுன்னா எனக்கு இவங்க ஞாபகம் தான் வரும். பாச மலர் range-கு சொல்ற மாதிரி இருக்கும், ஆனால் அது தான் உண்மை. ஏன்னா நாங்க அவளோ பேசிருக்கோம்.

என் தங்கச்சி என்ன மாதிரி இல்ல. அவ extrovert. ரொம்ப social. ஒருத்தர் கூட ரொம்ப சீக்கிரம் பழகி நட்பை உருவாக்கிடுவா. எனக்கும் முன்னாடியே அவளுக்கு அண்ணன்கள் நிறையா இருக்காங்க. இருந்தாலும், எப்படி எனக்கு அவ தான் closest -ஒ அப்படித்தான் நானும் அவழுக்கு closest -ன்னு நானாக நினைச்சிபேன். அது அப்படி இருக்கோ இல்லையோ ஆனா எனக்கு ஒரு நப்பாசை and அதுனால எனக்கு மிக சிறந்த சந்தோஷம் – ஏன்னா சுமார் இருவது வருஷமா தனியாவே இருந்து இப்படி திடீர்ன்னு ஒரு நட்பு, ஒரு தங்கை (அதுலயும் நாள் முழுக்க பேசிட்டே இருப்போம் sms வழியா) so, அப்படி ஒரு நெனப்பு. மெய்யாலுமே ஒரு அண்ணனா இருக்க நமக்கும் குடுத்து வெச்சிருக்கேன்னு ஒரு அல்ப சந்தோஷம், மகிழ்ச்சி.

நாள் முழுக்க sms அனுப்பிகிட்டே இருக்கறது எனக்கு ரொம்பவே புது விஷயம். எனக்கு முன்னாடி அவ அவளோட நண்பர்களுக்கும் அண்ணன் ஒருத்தருக்கும் அப்படி அனுப்சிருக்கான்னு சொல்லிருக்கா. ஆனா என் வாழ்க்கைல இது தான் முதல் முறை sms இப்படி சறமாரியா அனுப்புறது. அதாவது நாங்க ஏதோ ஒரே வீட்ல இருந்து பேசிக்கிற மாதிரி இருக்கும். இது மட்டும் இல்ல, நிறைய விஷயங்கள பற்றி பேசிருக்கோம். மொக்கைலேந்து முக்கியமான விஷயங்கள ரொம்ப நேரம் discuss பண்ணிருக்கோம்.

என் தங்கையோட பாசத்திற்கு அழவே இல்லை. இதுவும் சினிமா டயலாக் மாதிரி தான் இருக்கும் but இது தான் உண்மை. எனக்கு கோவம்ன்னு வந்தா எதும் பேசாம இருப்பேனே தவிர சண்டை போட மாட்டேன். நான் அம்மா கிட்ட மட்டும் தான் பயங்கர சண்டை போடுவேன். அதுக்கு அடுத்து என்னமோ தெரியல இவ கிட்ட மட்டும்தான் பயங்கர சண்டை போட்டுருக்கேன். இனி இவ்ளோ தான் எல்லாம் முடிஞ்சி போச்சுங்கற அழவுக்கு சண்டை. இப்போ ஏதோ கொஞ்சம் திருந்திட்டேன்னு இருந்தாலும் வேதாளம் எப்போ முருங்க மரம் ஏறும்னு யாருக்கு தெரியும்? 😛

ஆனால் நான் சண்டை போட்டதால இவ கொவமானதே இல்ல. அந்த விஷயத்துல என் அம்மாவையே மிஞ்சிட்டா. நிறைய தடவை எனக்கு அவ கால் தொட்டு கும்புடணும் போல இருக்கும். நான் அவ்ளோ மட்டமா சண்டை போட்டப்றம் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆனாலும், அவளுக்கு கோவமும் வராது, வெறுப்பும் வராது. ஒரு தாய் போல உடனே அரவனைச்சிடுவா.

அதெல்லாம் சரி பா இப்போ இந்த blogpost எதுக்கு? சொல்றேன்.

ஊர்ல நிறையா friends, brothers, sisters இருக்குறப்ப இவங்க தான் எனக்கு மிக பிடித்தவர், பிடிதவள்ன்னு சொல்றது அவ்ளோ நல்லதில்ல. நம்ம வாழ்வதற்கும், நமக்கு நல்லது செய்வதற்கும் எக்கச்சக்க நபர் இருக்காங்க. இருந்தாலும் அம்மான்னு வரப்ப அது ஒரு தனி feeling. எனக்கு என் தங்கையும் அப்படித்தான். அந்த அழவுக்கு அவ என் மேல பாசம், அன்பு, பொறுமை, நட்பு மற்றும் தாய்மை காட்டிருக்கா.

ஆறு மாதமா நான் அவ கூட ஆறு வருஷத்து சமாசாரம் பேசிருப்பேன். தினம் தினம் என்ன நடந்ததுன்னு என் அம்மா கிட்ட கூட சமயத்துல சொல்ல மாட்டேன். ஆனால் என் தங்கை கிட்ட சொல்லனும்ன்னு துடிச்ச்சதுண்டு. என் சொந்த கதை சோக கதை எல்லாம் நிதானமா கேப்பா. நிறையா சமாதானம் சொல்லிருக்கா. அவ ஒரு தங்கை மட்டும் இல்ல. சமயத்துல என் குழந்தை, சமயத்துல என் அண்ணை, சமயத்துல என் எல்லாமே.

நாங்க பேச ஆரம்பிச்ச நாள்லேந்து ஒரு நாள் கூட message பண்ணாம இருந்ததில்ல. சில மணி நேரம் தொடர்பில்லாம இருந்துருக்கோம், ஆனா அதுவே எனக்கு ரொம்ப தனிமையா இருக்கும். அவ காலேஜ் முடிச்சு, அப்பறம் ஒரு சில exams எழுதி முடிச்சு இப்போ தான் அவளுக்கு ரொம்ப நெருங்கிய குடும்பத்தினரோட வெழிய போறா.

அதனால எங்களால முன்ன மாதிரி message பண்ண முடியல. என் வாழ்க்கைல இந்த ரெண்டு நாள் மட்டும் நரகம் போல இருந்துச்சு. வெழிய காம்சிக முடியலைன்னாலும் ரொம்பவே கஷ்டமாத்தான் இருந்துச்சு. நடு நடுவுல ரெண்டு மூணு messages அனுப்சிகிட்டாலும் முழுமையா பேசுன மாதிரி இல்ல. ரொம்பவே miss பண்றேன் என் தங்கைய.

சாதாரணமா நான் போலம்பரதேல்லாம் எப்பயோ நிருத்திட்டேன்னு நினைச்சேன். யார் கிட்டயும் போய் என் பிரச்சனைய சொல்றதில்ல. முக்கியமா இப்படி blogpost -எல்லாம் பன்னிருக்கவே மாட்டேன். But என் தங்கைய miss பண்றேன், என் அம்மாவ miss பண்றேன். நான் உன்ன ரொம்ப miss பண்றேன்னு அவளுக்கு ரொம்ப அதிகமா message பன்னா அப்புறம் அவ சந்தோஷமா spend பண்ற நேரத்த கெடுத்த மாதிரி ஆய்டும். இருந்தாலும் அவ message பண்ணப்ப எல்லாம் மூடி மறைச்சி சொன்னேன். ஆனால் இப்போதான் மனசுல இருந்தத வெழிய கொட்டின அனுபவம். என்னதான் இருந்தாலும் நானும் மனுஷன் தானே? 😦

ஒரு அண்ணனா ஒன்னும் கிழிக்கல. இருந்தாலும் என்னையும் ஒரு அண்ணனா ஏத்து, அழவுகடந்த பாசத்த காமிச்சதுக்கு நன்றி சொல்ல இந்த ஜன்மம் பத்தாது. At the least, உன் கிட்ட சண்டை போடாம, உன்ன வருத்த படுத்தாம, உனக்கு தேவை படும்போதெல்லாம் என்னால முடிஞ்ச உதவிய செய்ய முயற்சிக்கிறேன்.

– இப்படிக்கு an eternally thankful soul.

This entry was posted in misc.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s